ஊடகவியலாளர்களை மிரட்டும் யாழ். ஆவா குழு!!

597

Avaஆவா குழு வடக்கு ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொலிஸாருடன் உறவுகளைப் பேணினால் வெட்டிக் கொலை செய்வதாக ஆவா குரூப் எனும் பாதாள உலகக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸாருடன் ஊடகவியலாளர்கள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என மிரட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் நான்கு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றி வரும் ஊடகவியலாளர்கள் இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அண்மையில் குறித்த ஆவா குரூப்பைச் சேர்ந்தவர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு ஆவா குருப்பைச் சேர்ந்தவர்களும் அதன் ஆதரவாளர்களும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பொலிஸாருடன் இணைந்து உளவுப் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்களை கொலை செய்யப் போவதாக ஆவா குருப் எச்சரித்துள்ளது.

இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ஆவா குருப் தொடர்பில் பொலிஸாரிடம் விசாரித்துள்ளார். இவ்வாறான குழுக்கள் தலைதூக்க இடமளிக்கக் கூடாது என அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.