வெளிநாட்டில் எரிமலை வெ டிப்பில் சிக்கிய இந்திய தம்பதி : அனாதையான 3 பிள்ளைகள்!!

627

நியூசிலாந்தில் எரிமலை வெ டிப்பில் சிக்கிய இந்திய வம்சாவளி தம்பதி ம ரணமடைந்ததால், அவர்களின் 3 பிள்ளைகள் அனாதைகளாகி உள்ளனர்.

அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் உள்ள ‘சேவா இன்டர்நேசனல்’ என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் பிரதாப் சிங்.

இவரது மனைவி மயூரி. இருவரும் இந்திய அமெரிக்கர்கள். இவர்களுக்கு 11 வயதில் மகனும், 6 வயதில் இரட்டையர்களாக பிறந்த மகள்களும் உள்ளனர்.

இவர்கள் கடந்த மாதம் 9 ஆம் திகதி, நியூசிலாந்தில் உள்ள வெள்ளை தீவுக்கு சொகுசு கப்பலில் சுற்றுலா சென்றுள்ளனர்.

பிரதாப் சிங்கின் தாய் மற்றும் 3 குழந்தைகளும் கப்பலில் இருந்துள்ளனர். பிரதாப் சிங் மற்றும் அவரது மனைவியும், மற்ற பயணிகளுடன், ‘ஸ்டோன் மவுன்டைன்’ எரிமலை பகுதியை பார்வையிட சென்றனர்.

அப்போது திடீரென எரிமலை வெ டித்து சி தறியது. இதில் 13 பேர் இ றந்தனர். 24 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் மயூரியின் உடலில் 72 சதவீத தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த மாதம் 22 ஆம் திகதி ம ரணமடைந்துள்ளார்.

பிரதாப் சிங்குக்கு 55 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. இவர் நியூசிலாந்தின் மிடில்மோர் மருத்துவமனையில் கடந்த 50 நாட்களாக போ ராடி வந்த நிலையில் புதனன்று மர ணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இவர்களின் மர ணத்தால், இவர்களின் 3 குழந்தைகளும் தற்போது அனாதைகளாகி உள்ளனர்.