மலேசியாவில் 5000 இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்!!

663

Malaysiaமலேசியாவில் 5000 இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து தொழில்களில் ஈடுபட்டும் வருவோரை மலேசிய பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக தங்கியுள்ள 50க்கும் மேற்பட்ட இலங்கையர்கள், மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சுற்றுலா வீசா மூலம் மலேசியாவிற்குள் பிரவேசித்த அதிகளவான இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தொழில்களில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் தெரிவித்துள்ளார்.