வென்னப்புவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 56 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ – வய்க்கால பிரதேச மில் ஒன்றின் முகாமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மில்லின் உரிமையாளரது வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி வென்னப்புவ பொலிஸில் பலாத்கார சம்பவம் குறித்து சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி கடந்த 12ஆம் திகதி இரவு அந்நபர் தன்னை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறைப்பாட்டை தொடர்ந்நது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.