தமிழ் ரசிகர்களை, ரொம்பவே மிஸ் பண்ணிட்டீங்களே?
ஆமாம் நல்ல கதைக்காக தான் காத்திருந்தேன். தெலுங்கில் நிறைய படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். இந்தியில் இரண்டு படங்கள் செய்றேன். என்னை பொறுத்தவரை,மொழி முக்கியம் இல்லை; நல்ல கதைகள் அமையணும், அப்போது தான், எனக்கும் நடிக்க ஆர்வம் வரும். இனி, தமிழில், நல்ல கதைகள் அமையும்போது, தமிழ் ரசிகர்களை மிஸ் பண்ணவே மாட்டேன்.
பெரிய இடைவெளிக்கு பின், வீரம் படத்தின் மூலம், மீண்டும் தமிழுக்கு வந்திருக்கீங்க. அந்த அனுபவம் குறித்து?
அஜீத் சாருடன், இந்த படத்தில் தான், முதல் முறையாக நடித்துள்ளேன். இதில் நடித்தது, நல்ல அனுபவம். படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை எனக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்பு கிடைத்தது. எனக்கு இந்த படம் ரொம்பவே ஸ்பெஷல்ன்னு சொல்லலாம். இந்த படத்தில் நானும் இருந்தேன் என்பதற்கு பெருமைப்படுகிறேன்.
பெரிய ஹீரோக்கள் படம்னாலே, டூயட் பாடுவது மட்டும் தானே, ஹீரோயின் வேலை. உஙகளுக்கு?
வீரம் படத்தை பொறுத்தவரை எனக்கு நிறைய வேலை இருந்தது. என்னை வெறும் பாட்டுக்காக மட்டும், அவங்க பயன்படுத்தவில்லை. புடவை அணிந்து வரும் காட்சிகள் அதிகமாக உள்ளன. அச்சு அசலான தமிழ் பெண்ணாக தான் நடித்திருக்கிறேன்.
நீங்க நடிக்க முடியாம போன ஹீரோ, இயக்குனர்கள்?
இப்போது, அதிகமாக, புது இயக்குனர்கள், ஹீரோக்கள் வந்திட்டாங்க. நல்ல திறமைசாலிகள் இருக்காங்க. இன்னும் நிறைய படங்களில், இவங்களோட எல்லாம் வேலை பார்க்கணும். கவுதம் மேனன் படங்களில் நடிக்கவில்லை.
அவரோட படத்தில் நடிக்க வேண்டும். அப்புறம் ஆர்யாவுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். இப்படி ஒரு லிஸ்ட்டே இருக்கு.
இத்தனை ஆண்டில் கத்துக்கிட்டது?
எதுக்கும் அவசரப்படக்கூடாது, அமைதி தான் வாழ்க்கை என்பதை கத்துக்கிட்டேன்.





