மலவாயிலில் 18 தங்க பிஸ்கட்களை மறைத்து கொண்டுவந்த ஆண் கைது!!

482

Goldடுபாயில் இருந்து இலங்கைக்கு மலவாயிலில் மறைத்து தங்கம் கடத்தி வந்த 29 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.

இன்று மாலை 3 மணியளவில் குறித்த ஆண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

குறித்த ஆணின் மலவாயிலில் இருந்து 9,000,000 பெறுமதியான 1800 கிராம் நிறையுடைய 18 தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட ஆணிடம் சுங்கப் பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.