பிரித்தானியாவில் பாரிய மோசடியில் ஈடுபட்ட இலங்கையருக்கு 7 வருட சிறைத்தண்டனை!!

431

7 வருட சிறைத்தண்டனை

பிரித்தானியாவில் பாரிய பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மின்னஞ்சல் ஊடாக பல மில்லியன் டொலர் மோ சடி செய்த இலங்கையில் பிறந்த பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு சிறைத் தண்னை விதிக்கப்பட்டுள்ளது.



41 வயதான கைகல் கினேன் என்பவருக்கு 7 ஆண்டுகளும் 8 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்து கெனாபோன் க்ரௌன் நீதிமன்றம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நிறுவனம் ஒன்றின் மின்னஞ்சல் திட்டம் மூலம் 8 மில்லியன் டொலர் மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் மீது, பணச்சலவை உள்ளிட்ட மேலும் சில குற்றங்கள் தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.