பிரிட்டனில் உள்ள ஸ்கொட்லாந்து எடின்பர்க் நகரை சேர்ந்தவர் ரோஸ்தீப் குலார் (33).அழகுகலை நிபுணரான அவர் 5 குழந்தைகளுக்கு தாயானவர்.
இந்திய வம்சாவளி பெண்ணான அவர் கடந்த வியாழன் அன்று தனது 3 வயது மகன் மிகாயீல் குலாரை காணவில்லை என்று கூறினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தாள் அவன் தனியாக படுத்து இருந்தான் என்றும் பொலிஸாரிடம் கூறினார்.
அதைத்தொடர்ந்து பொலிஸாரும், அப்பகுதி பொதுமக்களும் பல இடங்களில் அவனை தேடினர். இந்த நிலையில் 20 மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள கிர்க்காலடி என்ற இடத்தில் மிகாயீல் இறந்த நிலையில் பிணமாக கிடந்தான்.
இங்குதான் ரோஸ்தீப் தங்கை வசித்து வருகிறார். இவரது கணவர் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே அவனது பிணத்தை கைப்பற்றிய பொலிஸார் மிகாயீலின் தாயார் ரோஸ்தீப்பிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து மிகாயீலின் தாயார் ரோஸ் தீப்பை பொலிஸார் கைது செய்தனர். 5 குழந்தைகளுக்கு தாயான ரோஸ்தீப் நேற்று எடின்பர்க்கில் உள்ள ஷெரீப் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதில், மகன் மிகாயீல் குலாரை கொலை செய்து வீசியதாக நீதிமன்றம் ரோஸ்தீப் மீது குற்றம் சுமத்தியது. இதையடுத்து அவர் சிறையிலடைக்கப்பட்டார். அவர் மீதான அடுத்த விசாரணை வரும் 28 ஆம் திகதிநடைபெறுகிறது.