மன்னார் புதைகுழி விடயத்தில் இராணுவத்துக்கு தொடர்பில்லை : இராணுவ தளபதி!!

592

Mannarமன்னாரில் புதைக்குழி தொடர்பில் இராணுவம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை இலங்கையின் இராணுவ தளபதி நிராகரித்துள்ளார்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா கமமே இது தொடர்பில் தகவல் தருகையில், புதைக்குழி பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசம் என்ற வகையில் இராணுவத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று குறிப்பிட்டார்.

இந்தநிலையில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.