பிரித்தானிய பெண்ணை பலாத்காரம் செய்து அவரது கணவரை கொலை செய்த வழக்கில் தங்கல்லை பி.ச தலைவர் கைது!!

461

Arrestedதங்கல்லை பிரதேச சபையின் தலைவர் சம்பத் சந்திரபுஸ்ப வித்தான பத்திரன கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியமை மற்றும் அவரது கணவனை கொலை செய்ய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று இரவு குற்ற புலனாய்வு பிரிவினரால் கோட்டை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தங்கல்லை பிரதேச சபையின் தலைவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இவருக்கு எதிரான நீதிமன்றும் பிடியாணை பிறப்பித்திருந்தது.