சாரதி அனுமதிப் பத்திர விநியோகத்தை பொறுப்பேற்கும் அரசாங்கம்!!

597

சாரதி அனுமதிப் பத்திரம்

ஸ்மார்ட் காட் சாரதி அனுமதிப் பத்திர விநியோகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கும் என போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இந்த விநியோகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று அவர் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அமைச்சர் இந்த பதிலை வழங்கியுள்ளார். ஸ்மார்ட் காட் சாரதி அனுமதிப்பத்திர விநியோகத்தை தனியார் நிறுவனம் ஒன்று 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. இந்த காலத்துக்குள் பாரிய நிதி மோ சடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மெட்ரோ பொலிட்டன் குருப் ஒப் கொம்பனீஸ் இந்த செயற்பாட்டை மேற்கொள்ளும் போது உடன்பாட்டை மீறி செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்போது 7 வருடங்களுக்குள் அந்த நிறுவனம் 6 பில்லியன் ரூபாயை வருவாயாக பெற்றுள்ளது.

அந்த நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி மாதம் ஒன்றுக்கு 22500 ஸ்மார்ட் சாரதி அனுமதிப் பத்திரங்களையே விநியோகிக்க முடியும். எனினும் குறித்த நிறுவனம் 55 ஆயிரம் அட்டைகளை விநியோகித்துள்ளதென்றும் நளிந்த ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.