கிரிக்கெட் வாழ்வின் ஆரம்பத்தில் தவறு செய்துள்ளேன் : மனந்திறந்த கோலி!!

460

Kohliதனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் சில தவறுகளை செய்துள்ளதாக இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

எனினும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது தேவையற்ற ஒன்றென தற்போது தாம் உணர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

25 வயதான விராட் ​கோலி சிறப்பான துடுப்பாட்டம் மூலம் புகழப்படுகின்ற போதிலும், மோதல் சூழ்நிலைகளில் மிகவும் ஆக்ரோஷமாக செயற்படுகின்றமை குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தார்.

இறுதியாக நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் பந்துவீச்சாளர் தன்மை ஆத்திரமூட்டும் வகையில் நோக்கியதாகவும் விராட் கோலி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தாமும் ஆத்திரமூட்டும் வகையில் நோக்கிய போதிலும். வார்த்தை பிரயோகங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.