வவுனியாவில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு பா லியல் ல ஞ்சம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!!

857

செயலமர்வு..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கான பா லியல் லஞ்சம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று காலை 9 மணி தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் தலைமையில் டிரான்ஸ்பரன்சி இன்டநெசனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வவுனியா கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த செயலமர்வில்,

நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் சுஜீத் மற்றும் மங்களா சங்கர் இருவரும் வளவாளராக கலந்து கொண்டு பா லியல் லஞ்சம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அதற்கான சட்ட ஏற்புகள் தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது.

இதில் 50க்கு மேற்பட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.