இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைக்கு அருகில் பூமியதிர்ச்சி : சுனாமி ஏற்படும் அபாயமா?

729

பூமியதிர்ச்சி

வட இந்தியப் பெருங்கடலில் பூமி அதிர்ச்சி உணரப்பட்டதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 2.34 மணியளவில் இந்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வட இந்திய பெருங்கடலில், இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைக்கு அருகில் 10 கிலோமீற்றர் ஆழ் கடலில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது. 5.4 ரிக்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் இந்த பூமி அதிர்ச்சியில் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை என தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய கடற்பகுதிகளில் வாழும் சாதாரண பொது மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுத்தல் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தேசிய மற்றும் சர்வதேச நிறுவனத்தின் இணப்பாட்டுடன் வெளியிடப்படுவதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையின் பல பகுதிகளிலும் பூமியதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, குடுகலஹேன மற்றும் தெய்யன்தர பிரதேசத்தில் சிறிய அளவிலான பூமி அதிர்ச்சி உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 2.33 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சில நொடிகள் இந்த அதிர்வு உணரப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக காலி மாவட்டத்தன் மெதகீம்பிய பிரதேசத்திலும் இவ்வாறான அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.