சொகுசு பஸ்ஸில் சல்லாபத்தில் ஈடுபட்ட ஐந்து ஜோடிகள் கைது!!

718

Busகண்டி – மாத்தளை சொகுசு பஸ் வண்டிகளில் காதல் சல்லாபங்களுடன் மிக மோசமான வகையில் நடந்து கொண்ட 5 இளம் ஜோடிகளை கைது செய்ததாக மாத்தளை தலைமை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளம் ஜோடிகள் கண்டி நகரில் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் என பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

கண்டி – மாத்தளை சொகுசு பஸ் வண்டிகளில் பயணிப்போர் இவ்வாறான செயல்பாடுகளைக் கண்டு அதிருப்தியுடன் பொலிசாருக்கு வழங்கிய தகவல்களையடுத்து மாத்தளை பொலிஸார் குறித்த பஸ்வண்டிகளில் திடீர் சோதனைகளை நடத்தி இவ்வாறு மோசமாக நடந்துகொண்ட 5 ஜோடிகளை கைது செய்தனர்.

குறித்த 5 ஜோடிகளையும் பொலிசார் விசாரணைக்குட்படுத்திய போது, கண்டி நகர மேலதிக வகுப்புகளுக்கு வரும் தாங்கள் காதல் காரணமாக இவ்வாறு பஸ் வண்டிகளில் நடந்து கொள்வதாகவும் சில பஸ் நடத்துநர்களுக்கு பஸ் கட்டணத்தை விட மேலதிக கட்டணம் வழங்கி தங்களுக்கான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.