வவுனியாவில் சைவ சமயத்தவர்கள் கல்லையும் மண்ணையும் வணங்குகின்றார்கள் : மதவாதத்தை கக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்?

503

மதவாதத்தை கக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்?

வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (16.02.2020) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மறவன்புலவு சச்சினாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் நாங்கள் சென்று நாங்கள் உங்களுக்கு வாக்களித்து உங்களை தெரிவு செய்தோம் எங்களுடைய பகுதியில் ஒர் பிரச்சனையுள்ளது வாருங்கள் எமக்கு தீர்வினை பெற்றுத்தாருங்கள் என தெரிவித்தோம்.

அதற்கு குறித்த பாராளுமன்ற உறுப்பினர் என்ன பிரச்சனை என வினாவினார். எங்களது பகுதியில் ஒர் பிள்ளையார் ஆலயம் உள்ளது அதற்கு முன்பாக அந்தோனியார் சிலையினை வைக்கின்றனர், விவேகானந்தர் சிலையினை உடைக்கின்றனர் என தெரிவித்தோம்.

இதன் போது அந்த பாராளுமன்ற உறுப்பினர் வேப்ப மரத்தினையும் மா மரத்தினையும் கல்லையும் மண்ணையும் வணங்கும் உங்களுக்கு இது எல்லாம் தேவையா என கேள்வி கேட்டார் சைவ மக்களின் வாக்குகளை பெற்று தெரிவான ஓர் நாடாளுமன்ற உறுப்பினர்.

திருக்கேதீஸ்வர வளைவு பிரச்சனையில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதுவரையில் குரல் கொடுக்கவில்லை. இது சைவர்களுடைய மனத்தினை புன்படுத்திய ஓர் நிகழ்ச்சி.

அவர்கள் நாடாளுமன்றத்தில் கதைத்துள்ளனரா? அல்லது பொதுமக்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனரா? வன்னியில் தெரிவான எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் திருக்கேதீஸ்வர வளைவினை பற்றி பேசியது கிடையாது. ஆனால் வளைவினை உடைத்தவர்களுக்கு பா துகாப்பு வழங்கியுள்ளனர்.

யார் வாக்குகளில் அவர்கள் தெரிவானவர்கள்? யார் அவர்களை தெரிவு செய்தனர்? சைவ மக்கள் தெரிவு செய்தனர் சைவ மக்களிடம் வாக்கு கேட்டனர். வாக்களித்தார்கள் இது போல சைவ சமயத்தினை இல்லாமல் செய்யும் நிறைய விடயங்கள் வடக்கில் உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.