சுனந்தாவின் உடல் பகுதிகளை கடித்த மர்ம நபர்!!

585

Sunanthaமத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் கையில் யாரோ ஆழமாக கடித்த தழும்பு இருந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டல் அறையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் மன அழுத்தத்திற்கான மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டதால் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் விஷத்தால் இறந்திருக்கலாம் என பின்னர் பேசப்பட்டது.

மேலும் அவர் இறக்கும் முன்பு யாருடனோ போராடியுள்ளார் என்றும், அந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட காயங்கள் அவரது உடலில் உள்ளது எனவும் தகவல் கிடைத்தது.

இந்நிலையில் சுனந்தாவின் கையில் யாரோ ஆழமாக கடித்த தழும்பு இருந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கையில் 12 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், மேலும் தாடை, கழுத்து ஆகிய பகுதிகளிலும் காயங்கள் இருந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

சுனந்தாவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.