கொள்ளையரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வர்த்தகர் பலி!!

613

Shootingகொள்ளையர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தங்கொட்டுவ சிங்கக்குலிய என்னும் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் உள்ளவர்களை அறை ஒன்றில் போட்டு அடைத்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.

ஆயுத முனையில் குறித்த வர்த்தகர் குடும்பத்தை அச்சுறுத்தியுள்ளனர்.

கொள்ளையர்கள் வீட்டை விட்டு வெளியேறிச் செல்ல முயன்ற சந்தர்ப்பத்தில், குறித்த வர்த்தகரின் நண்பரான மற்றுமொரு வர்த்தகர் பஜிரோ வாகனமொன்றில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த கொள்ளையர்கள் வர்த்தகரின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தங்கொட்டுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.