முல்லைத்தீவில் வேகக்கட்டுப்பாட்டை மீறி நாயாற்றுக்குள் பாய்ந்த இராணுவ வாகனம்!!

783

நாயாற்றுக்குள்..

முல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி நாயாற்று களப்பினுள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொக்கிளாய் – முல்லைத்தீவு வீதியால் பயணித்த இராணுவ வாகனமே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த இராணுவத்தினர் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை விபத்து இடம்பெற்ற பகுதியை பார்வையிடுவதற்கு எவரையும் இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.