பயிற்சிக்கு வந்த பெண்களை நி ர்வாணமாக நிற்க வைத்து சோ தனை : சர்ச்சையில் மருத்துவர்கள்!!

292

பெண்களை..

நகராட்சி எழுத்தருக்கான 10 பயிற்சி பெண்களை நி ர்வாணமாக நிற்கவைத்து மருத்துவர்கள் சோ தனை செய்துள்ள சம்பவம் ச ர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 20 அன்று குஜராத்தில் சூரத் நகராட்சியால் நடத்தப்படும், சூரத் முனிசிபல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் (SMIMER), நகராட்சிக்கான பயிற்சி எழுத்தர்களை நி ர்வாணமாக வைத்து பரிசோதனை செய்துள்ளனர்.

இதுகுறித்து வியாழக்கிழமை அன்று பொலிஸாரிடம் கொடுக்கப்பட்ட புகாரில், சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கம் திருமணமாகாத பெண்கள் உட்பட 10 பயிற்சி எழுத்தர்களை ஒரே அறையில் நி ர்வாணமாக நிற்க வைத்து, கர்ப்ப பரிசோதனை செய்ததாக கு ற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களில் அறிக்கை தா க்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்குழுவில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் டாக்டர் கல்பனா தேசாய், உதவி நகராட்சி ஆணையர் காயத்ரி ஜரிவாலா மற்றும் நிர்வாக பொறியாளர் துருபி கலத்தியா ஆகியோர் அடங்குவர்.

விதிகளின்படி, அனைத்து பயிற்சி ஊழியர்களும் தங்களது பயிற்சி காலம் முடிந்ததும் வேலைக்கான உடல் தகுதியை நிரூபிக்க உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

அதேபோல கட்டாய பரிசோதனைக்காக மூன்று ஆண்டு பயிற்சி காலம் முடிந்ததும், சில பெண் பயிற்சி எழுத்தர்கள் மருத்துவ பரிசோதனைக்காக SMMER மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அவர்கள் கட்டாய சோதனைக்கு எதிரானவர்கள் அல்ல என்றாலும், மகளிர் மருத்துவ வார்டில் பெண் ஊழியர்களுக்கு பின்பற்றப்பட்ட முறை தவறானது என தொழிற்சங்கம் புகார் கூறியுள்ளது.

“சோ தனைக்காக அறையில் பெண்களை ஒன்றன் பின் ஒன்றாக அழைப்பதற்கு பதிலாக, பெண் மருத்துவர்கள் அவர்களை 10 பேர் கொண்ட குழுவில் நி ர்வாணமாக நிற்க வைத்துள்ளார்கள். மற்றவர்களுடன் நி ர்வாணமாக நிற்க அவர்களை கட்டாயப்படுத்தும் இந்த செயல் மிகவும் இழிவானது”.

இந்த முறை ச ட்டவி ரோதமானது மற்றும் மனிதகுலத்திற்கு எ திரானது. ஒவ்வொரு பெண்ணும் தனித்தனியாக பரிசோதிக்கப்பட வேண்டியது அவசியம்” என்று தொழிற்சங்கம் தனது புகாரில் தெரிவித்துள்ளது.

அந்தக் குழுவில் உள்ள திருமணமாகாத பெண்கள் கூட அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா இல்லையா என்பதைச் சோதிப்பதற்கான உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் அகமது ஷேக் கூறியுள்ளார்.

“அவர்கள் மற்ற பெண்களுக்கு முன்னால் ஒரு சங்கடமான சூழ்நிலையில் வைக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனைகளின் போது பெண்களின் மரியாதை பராமரிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது தற்போது பெரும் சர் ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சூரத் மேயர் ஜெகதீஷ் படேல் கு ற்றவாளிகள் மீது க டுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

குஜராத்தின் பூஜ் நகரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியின் மாணவர்கள், மாதவிடாய் இல்லை என்பதை நிரூபிக்க விடுதி அதிகாரிகள் உள்ளாடைகளை அகற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சில நாட்களுக்குப் பிறகு இந்த அ திர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.