நடிகர் ஷாருக்கானுக்கு லேசான காயம் தான். அதை ஊதி பெரிதுபடுத்தாமல் போய் எனது ஜெய் ஹோ பட வேலையில் கவனம் செலுத்துங்கள் என்று நடிகர் சல்மான் கான் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான் தனது தோழி ஃபரா கான் இயக்கத்தில் ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்து வருகிறார். நேற்று மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் படப்பிடிப்பு நடக்கையில் ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நானாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு காயம் ஏற்பட்ட செய்தி அறிந்த ஊடகங்கள் படப்பிடிப்பில் விபத்து ஷாருக்கான் காயம் என்று இதிலேயே சிறிது நேரம் கவனம் செலுத்தின.
ஷாருக்கானுக்கு லேசான காயம் என்பதால் சிகிச்சையை முடித்துக் கொண்டு அவர் காரில் ஏறி படப்பிடிப்பு தளத்திற்கு சென்று மீண்டும் தனது வேலையை நேற்றே தொடங்கிவிட்டார்.
ஷாருக்கிற்கு காயம் ஏற்பட்டது பற்றி பத்திரிக்கையாளர்கள் சல்மான் கானிடம் சென்று கேட்டனர்.
ஷாருக்கிற்கு எனது ஜெய் ஹோ படம் (இன்று) வெளியாக இருக்கும்போது தானா இது நடக்க வேண்டும்? சும்மா இதை ஊதி பெரிதுபடுத்தாதீர்கள் என்றார் சல்மான்.
ஷாருக்கானை யாரும் தாக்கிவிடவில்லை. அவர் சுயநினைவை இழந்துவிடவில்லை. அவர் நன்றாக உள்ளார். அதனால் ஜெய் ஹோவிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று சல்மான் கூறினார்.
ஷாருக் நலமாக இருப்பதை அறிந்து கொண்டோம். அவர் நல்லபடியாக இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று சல்மான் தெரிவித்தார் ஜெய் ஹோ படம் சிரஞ்சீவி நடித்த ஸ்டாலின் தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.





