ஞாயிற்றுக்கிழமை மன்னார் – மதவாச்சி பிரதான வீதிக்கு பூட்டு!!

574

Road Closedமன்னார் – மதவாச்சி ஏ-14 பிரதான வீதி நாளை ஞாயிற்றுக்கிழமை சில மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இதன்படி முற்பகல் 10.00 மணி தொடக்கம் ஐந்து மணித்தியாலங்கள் குறித்த வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மன்னார் – மதவாச்சி வீதியின் 24ம் மற்றும் 60ம் கட்டைகளுக்கு அருகில், பிரதான வீதியை ஊடறுத்து ரயில் பாதை நிர்மாணப் பணிகள் இடம்பெறவுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.