ஜில்லாவால் மோகன் லாலுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்!!

445

Mohanlal

ஜில்லாவில் நடிப்பதற்கு ஒப்பந்தமானபோது கூட தமிழ் சினிமாவில் தனக்கு இப்படி ஒரு சங்கடம் நேரும் என்பதை மோகன் லால் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்.

நான்கு முறை தேசிய விருது பெற்ற மிகப் பெரிய லெஜன்ட் மோகன் லால். மலையாளத்தில் அவர் இணையற்ற நட்சத்திரம். எத்தனை எத்தனை புகழ்பெற்ற படங்களைத் தந்திருக்கிறார். அட தமிழிலும் அவர் அறிமுகம் அத்தனை மோசமில்லை. முதல் படத்திலேயே எம்ஜிஆராகத்தான் நடித்து அறிமுகமானார் (இருவர்). சிறைச்சாலையில் டாக்டர் கோவர்தனாக வாழ்ந்திருந்தார்.

கமலுடன் உன்னைப் போல் ஒருவனில் சின்ஸியர் கமிஷனராக நடித்தார். அப்போதெல்லாம் அவரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் என்றுதான் அழைத்து வந்தார்கள். அப்போதெல்லாம் நேராத சங்கடம். இப்போது ஜில்லாவில் விஜய்யுடன் நடித்த பிறகு ஏற்பட்டுவிட்டது மோகன்லாலுக்கு.

அவர் மலையாளத்தில் நடித்த கர்மயோதா படம் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது அல்லவா இந்தப் படத்தின் விளம்பரங்களில் மோகன் லாலுக்கு அடைமொழி என்ன தெரியுமா “ஜில்லா புகழ் மோகன் லால் நடிக்கும்”.. அடப் பாவிகளா ஜில்லாவுக்கு முன் மோகன்லால் நடிச்ச 320 படத்தையும் மறந்துட்டீங்களே!