பாணின் விலை குறைகின்றது : எவ்வளவு தெரியுமா?

607

பாணின் விலை..

ஒரு இறாத்தல் பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க வெதுப்பக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வரி குறைப்பை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சில வெதுப்பகங்கள் தமது உற்பத்தி பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.