ஐந்து கோடி பெறுமதியான தங்கம் கடத்தியவர் கைது!!

676

Goldசுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 10 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக எடுத்துவந்த இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து பயணித்த 54 வயதான ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் தங்கம் எடுத்து வந்த தாய் மற்றும் மகள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 20 தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். இந்த தங்கத்தின் நிறை 1035 கிராம் எனவும் அவற்றின் பெறுமதி 52 லட்சத்து 75,000 ரூபா எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவருக்கு தலா 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு 57 வதான தாய் மற்றும் 20 வயதான மகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.