கமல், வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருது!!

913

Kamal-Vairamuthuஇந்திய மத்திய அரசின் பத்ம விருதுகள் பெறுவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்துறை கவுன்சில் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.மசேல்கர் மற்றும் யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்துவான் வினாயக்ராம், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்ட 25 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திரைப்பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த அஜய் குமார் பரிடா, ஸ்குவாஸ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், தொழில்துறையை சேர்ந்த மல்லிகா ஸ்ரீனிவாசன், மருத்துவத்துறையில் தமிழகத்தை சேர்ந்த தேனும்கல் போலோஸ்ஜேக்கப், யுனானி மருத்துவத்துறையை சேர்ந்த ஹக்கீம் சையத் , கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.