விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்!!

555

Sivakarthikeyanசென்ற வருடத்தில் ஹட்ரிக் வெற்றியை கொடுத்து சினிமாவில் முன்னனி ஹீரோவாக முத்திரைப்பதித்து ரசிகர்கள் இடையே ஆரவாரத்தை ஏற்படுத்தி வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் பெரிய திரையில் மட்டும் இல்லாமல் இப்போது சின்னதிரையிலும் ரசிகள் இடையே முன்னனியில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த பொங்கல் தினத்தையொட்டி கடந்த 14ஆம் திகதியன்று முக்கிய தொலைக்காட்சிகளில் திரைக்கு வந்து ஒரு சில மாதங்களே ஆன புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின.

அதில் சன் டிவியில் விஜய்,அமலா பால் நடித்த தலைவா படமும், விஜய் டிவியில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ராஜா ராணி, படமும், ராஜ் டிவியில் விஷால் நடித்த பாண்டிய நாடு திரைப்படமும், கலைஞர் தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமும் ஒளிபரப்பாகின.

இதில் மேற்கண்ட படங்களில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்தான் அனைத்து தொலைக்காட்சி ரசிகர்களிடத்திலும் அதிகப்படியான வரவேற்பைப் பெற்று 12.29 டி.ஆர்.பி ரேட்டிங் (டி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான அளவீடு) பெற்று முதலிடம் பெற்றது.

தலைவா படத்திற்கு 11.39 டி.ஆர்.பி ரேட்டிங்கும், ராஜா ராணி படத்திற்கு 7.36 டி.ஆர்.பி ரேட்டிங்கும், பாண்டிய நாடு படத்திற்கு 3.76 டி.ஆர்.பி ரேட்டிங்கும் கிடைத்துள்ளன.

இதன் மூலம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெள்ளித் திரையில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் சாதனை படைத்திருக்கிறது.