தென்னிலங்கையிலுள்ள வைத்தியசாலையில் நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை!!

638

அபூர்வ சத்திர சிகிச்சை..

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் உ யிருக்கு போ ராடிய ஓய்வு பெற்ற இரா ணுவ கேனல் ஒருவருக்கு அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கராப்பிட்டிய வைத்தியசாலையின் சிறுநீரகம் மற்றும் நரம்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ரஞ்ஜுக உம்பேசிறி தலைமையிலான குழுவினரால் சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது

நன்கொடையாளரிடமிருந்து கிடைத்த சிறுநீரகம் ஒன்று ஓய்வு பெற்ற கேனலுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரங்களில் சிறுநீரகம் பொருத்தும் சத்திரசிகிச்சை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து சிறுநீரக நரம்பு வழியாக இர த்தம் வெளியேறத் தொடங்கியுள்ளன.

சுவர்கள் மெலிந்து பலவீனமடைவதால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கும் என எண்ணிய வைத்திய குழு, நோயாளிக்கு இரத் தப்போக்கு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர், மாற்றப்பட்ட சிறுநீரகத்தை தமனிகள் மற்றும் நரம்புகளிலிருந்து பிரிக்கத் தொடங்கினார். பின்னர் நோயாளியின் காலில் ஒரு நரம்பு எடுத்து, அதனை இரண்டாக பிரித்து மீண்டும் சீறுநீரகம் பொருத்தப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய நிலைமைகள் மிகவும் அரிதானவை என தெரிவித்த சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர், நரம்பு திரும்பியவுடன், நோயாளியின் சிறுநீரகம் மீண்டும் இயங்கியதுடன் அவர் உ யிருடன் இருப்பது அதிர்ஷ்டம் என குறிப்பிட்டுள்ளார்.