நான் நீக்கப்பட்டதன் காரணம் என்ன : அழகிரி விளக்கம்!!

551

Alagiriஆதரவாளர்கள் நீக்கம் பற்றி பேசியதால் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அழகிரி தெரிவித்துள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச்செயலாளர் மு.க.அழகிரி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தி.மு.க. குடும்ப அரசியல் நடத்துகிறது என்ற பழி இதன்மூலம் துடைக்கப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்தார்.

தனது நீக்கம் பற்றி கருத்து தெரிவித்த மு.க. அழகிரி, தி.மு.க. அழிவுக்கு கி.வீரமணி தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் கருணாநிதி கைதானபோது, நாட்டுக்கு விடுதலை கிடைத்தது என்றவர் கி.வீரமணி. அவரைப் பற்றி தி.மு.க.வினர் நன்கு அறிவார்கள். அவர் ஒரு அரசியல் வியாபாரி என்றும் எனது ஆதரவாளர்கள் நீக்கத்தை பற்றி பேசியதற்கு கிடைத்த பரிசு தான் என்மீதான நடவடிக்கை எனவும் கூறியுள்ளார்.