கொரோனா வைரஸ்..

தென் கொரியாவில் இருந்து இலங்கை வந்த குடும்பத்தின் தாய், தந்தை, மகன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவர்கள் பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 7 வயதான சிறுவனுக்கு காய்ச்சல் இருப்பதன் காரணமாக பரிசோதனை நடத்துவதற்காக மூன்று பேரும் விசேட சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை, ஹில்ஓய பிரதேசத்தை சேர்ந்த இந்த குடும்பத்தினர் நீண்டகாலம் தென் கொரியாவில் வசித்து வந்துள்ளதுடன் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து கடந்த 27 ஆம் திகதி இலங்கை திரும்பியுள்ளனர்.




