கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் முதல் நாய் : உறுதி செய்த மருத்துவர்கள்!!

520

நாய்..

கொரோனா தொற்றுநோயானது மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும் பரவுவதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஹாங்காங்கில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளியின் செல்ல நாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹாங்காங்கை சேர்ந்த 60 வயதான யுவோன் சோவ் ஹவ் யீ என்கிற பெண் தொழிலதிபரின் வளர்ப்பு நாய் கடந்த சில தினங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.

புதன்கிழமையன்று மருத்துவர்கள் நாய்க்கு சோதனை மேற்கொண்டபோது, குறைந்த அளவிலான தொற்றுநோயைக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அதனை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திய அதிகாரிகள், நாய் வைரஸிலிருந்து குணமாகும்வரை மீண்டும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, உண்மையில் வைரஸ் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மேலதிக சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற மற்றொரு நோயாளியின் நாய்க்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் எதிர்மறையான முடிவு கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இருந்தாலும் அந்த நாய் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.