கடலில் 9 வயது அவுஸ்திரேலிய சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட 19 வயது இளைஞன் கைது!!

1071

Beachருமஸ்சல, சுதுவெல்ல கடற் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி தனது தாய், தந்தையோடு கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இளைஞன் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டபோது சிறுமி சத்தமிட்டுள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை பிடித்து ஹபராதுவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதன் பின்னதாக இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.