நெகிழ்ச்சி செயல்..

தமிழகத்தில் சாலை விபத்தில் நண்பன் உ யிரிழந்த நிலையில், அவர் இ றந்த நாளில் நண்பர்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் வசித்து வந்தவர் நிர்மல்குமார். இவர் கடந்த வருடத்திற்கு முன் ஒருநாள் பைக்கில் சென்னைக்கு சென்று கொண்டிருந்த போது, மறைமலை நகர் பகுதியில் எதிர்பாரத விதமாக விபத்தில் சிக்கினார்.

இதனால் அவர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் உடம்பில் இருந்து அதிக அளவு இரத்தம் வெளியேறியதால், மருத்துவர்கள் உடனடியாக ரத்தம் வேண்டும் அப்போது தான் கா ப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளனர்.

ஆனால் அந்த நேரத்தில் ரத்தம் கிடைக்காததால், நிர்மல்குமார் ப ரிதாபமாக உ யிரிழந்தார். அவர் உ யிரிழந்ததை நண்பர்களால் தா ங்கிக் கொள்ள முடியவில்லை, இதனால் அவருடைய நினைவு நாளான இன்று,

நண்பர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்ததானம் செய்தார்கள்.

அப்போது அவர்கள், இனி ரத்தம் கிடைக்காமல் ஒரு உ யிரும் போகக்கூடாது, இதன் காரணமாகவே நாங்கள் ரத்த தானம் செய்கிறோம், என் நண்பனின் நினைவுநாளில் இனி ஒவ்வொரு வருஷமும் இப்படி ரத்த தானம் செய்வோம் என்று கூறினர்.

அரசு மருத்துவமனைக்குள் திடீரென 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்படி திரண்டு வந்து நண்பனுக்காக ரத்ததானம் செய்த சம்பவம் அங்கிருந்த நோயாளிகள் உட்பட அனைவரையுமே க ண்கல ங்க செய்துவிட்டது.




