இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் : ஏமாற்றப்படும் மக்கள்!!

536

ஏமாற்றப்படும் மக்கள்..

கொரோனா வைரஸை காரணம் காட்டி பொது மக்களிடம் பணம் பறிக்கும் வர்த்தகர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை, நாடு முழுவதும் உள்ள கடைகளை அவசரமாக ஆய்வு செய்து வருகிறது.

கொரோனா வைரஸ் ஆ பத்து காரணமாக கடைகளில் பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்தல் மற்றும் பொருட்களை பதுக்குதல் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான மோ சடி வர்த்தகர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரால் ஷாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த திடீர் சுற்றிவளைப்பின் ஒரு நடவடிக்கையான இதுவரையில் புறக்கோட்டை சந்தையில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.