இலங்கையில் தீவிரமடையும் கொரோனா தொற்று : அரசாங்கம் விதித்துள்ள தடைகள்!!

474

அரசாங்கம் விதித்துள்ள தடைகள்

இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இதுவரையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேகத்தின் பேரில் 103 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1700 பேர் மருத்துவ சோதனை நிலையங்களில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் அதிகமாக ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளதுடன் உலகளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என்பன பிற்போடப்பட்டுள்ளன.