அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் பிந்துமாதவி!!

526

Bindh madaviநடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசை என்று நடிகை பிந்துமாதவி கூறினார். காட்பாடியில் நேற்று நடிகை பிந்துமாதவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..

நான் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக். படித்தேன். என்னுடைய சொந்த ஊர் ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த மதனப்பள்ளி ஆகும். என்னுடைய தந்தை பாஸ்கர் ரெட்டி, வணிகவரித்துறையில் துணை கமிஷனராக உள்ளார். எனக்கு படிக்கும்போதே சினிமா துறைக்கு வரவேண்டும் என்று ஆசை. நான் பி.டெக்., படிப்பு முடித்தபிறகு மொடலிங் துறையில் ஈடுபட்டேன். அதை பார்த்து 2007ம் ஆண்டு எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது.

தெலுங்கு படத்தில் முதன்முதலில் நடித்தேன். நான் இதுவரை 5 தெலுங்கு படங்களிலும், 8 தமிழ் படங்களிலும் நடித்துள்ளேன். தற்போது தமிழில் 3 படங்களில் நடித்து வருகிறேன். நான் நடித்துள்ள ஒரு கன்னியும் 3 களவாணிகளும் என்ற படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். கிராமத்து பெண் வேடத்தில் நடிக்க விருப்பம். வரும் காலத்தில் விதவிதமான வேடங்களில் நடிப்பேன். தமிழுக்கும், தெலுங்குக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறேன் என்று அவர் கூறினார்.