வவுனியா நகரசபை விளையாட்டு மைதானம் மூடப்பட்டது!!

817

நகரசபை விளையாட்டு மைதானம்

வவுனியா நகரசபை மைதானமானது கோரோனா பீதி கரணமாக நகரசபை தவிசாளரின் உத்தரவுக்கு அமைவாக இன்று (17.03.2020) மூடப்பட்டது.

உலகம் முழுவதும் அச் சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இலங்கையிலும் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் பாடசாலைகள், வணிக நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் போன்றவற்றுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் விளையாட்டு மைதானங்களும் மூடப்பட்டு வருகின்றமை விளையாட்டு வீரர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த விளையாட்டு வீரர்கள், தேசிய மற்றும் மாகாண ரீதியில் நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிக்கு தயாராகிவரும் நிலையில் கொரோனா பீதி காரணமாக விளையாட்டு மைதானமும் மூடப்பட்டமையானது கவலையளிக்கிறது என தெரிவித்தனர்.