இத்தாலியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இலங்கையர் கைது!!

636

Arrestedபோதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வயதான இலங்கை இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் லூகா நகரில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உயர்கல்வி நிறுவனமொன்றிக்கு முன்னால் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சிறிய தராசு ஒன்று, செல்லிடப் பேசி, போதைப் பொருள் உள்ளிட்ட பொருட்களை இத்தாலிய பொலிஸார், இலங்கை இளைஞரிடமிருந்து மீட்டுள்ளனர்.

குறித்த இளைஞர் லோரன்ஸ் நகரில் அமைந்துள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இளைஞரின் பதினைந்து வயதான சகோதரரும் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக கடந்த ஒக்ரோபர் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.