வவுனியா செட்டிக்குளம் விபத்தில் ஒருவர் ப லி!!

627

விபத்தில்

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் ம ரணமடைந்துள்ளார். குறித்த முதியவர் நேற்று காலை செட்டிக்குளம் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மாட்டுடன் மோதியதிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி குறித்த முதியவர் ம ரணமடைந்துள்ளார். விபத்தில் செட்டிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் தலைவராக பணிபுரிந்த துரைவீரசிங்கம் (வயது68) என்பவரே மரணமடைந்தவராவார். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.