இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டியை 2-1 என்ற அடிப்படையில் இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை மகளீர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் பதிலெடுத்து துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இந்த வெற்றியுன் மூலம் தொடரை 2-1 என இலங்கை மகளிர் அணி கைப்பற்றியது.





