இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பு : மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம்!!

417

மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை ஆறு மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட 8 மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மக்கள் கடைப்பிடிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் ஒரு மீற்றர் இடைவெளியில் காத்திருந்ததுடன், முகத்திற்கு மாக்ஸ் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.