பிரபல சினிமா இயக்குனர் டி.ராஜேந்தருக்கு, சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும், இலக்கியா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்களில், இலக்கியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இவர் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.
மணமகன் பெயர் அபிலாஷ் பி.டெக். பட்டதாரி ஆவார். இவர், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர். இலக்கியா–அபிலாஷ் திருமணம் பிப்ரவரி 10ம் திகதி காலை 9 மணிக்கு, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பலஸ் ஹோட்டலில் நடக்கிறது. இது, பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் ஆகும்.
மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அன்று மாலை 6.30 மணிக்கு அதே ஹோட்டலில் நடக்கிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை டி.ராஜேந்தர், அவருடைய மனைவி உஷா ராஜேந்தர், மகன்கள் சிலம்பரசன், குறளரசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.





