இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த தவறினால் மிகப்பெரிய உயிரிழப்புகள் ஏற்படலாம்!!

769

அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நாட்டு மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார எச்சரித்துள்ளார்.

பாதுகாப்பற்ற சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றிவர்கள் நடமாடி இருப்பதால், இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே ஜயருவான் பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமந்த ஆனந்த கருத்து வெளியிடுகையில்,

“சில தரப்பினர் மிகவும் பொறுப்பின்றி நடந்து கொள்வதை காண முடிகிறது. இப்படி சென்றால், எம்மால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். அதன் மூலம் மிகப் பெரிய உயிரிழப்புகள் ஏற்படலாம்.

மக்கள் தொடர்ந்தும் பொறுப்பின்றி நடந்துக்கொள்வார்கள் என்றால், இந்த செயற்பாடுகளில் அர்த்தமில்லை. மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால், நாங்கள் எமது கடமைகளை கைவிட்டு உயிரை பாதுகாக்க வீட்டில் இருப்பது சிறந்தது.

தயது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இப்படியே சென்றால், முழு நாட்டையும் மூடி விட்டு அனைவரும் வீட்டில் இருக்க நேரிடும். அப்படி நடந்தால் மக்களே மீண்டும் அசௌகரியங்களுக்கு உள்ளாவர்.

எந்தளவுக்கு விளக்கி கூறினாலும் இதன மக்கள் புரிந்துக்கொள்ளாது எமக்கு ஆச்சரியமாக இருக்கின்றது” என சமந்த ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.