தனுஷ் பொக்கிஷமாக காத்த அனேகன் ரகசியங்கள் அம்பலம்!!

503

Danush

தனுஷ் தற்போது நடித்து கொண்டு இருக்கும் அனேகன் படத்தில் நவரச நாயகன் கார்த்திக் வில்லன் வேடத்தில் வேட்டையாட உள்ளார். பல விதமான கெட்டப்பில் கலக்க உள்ள தனுஷ் இப் படத்தை பற்றி எவரிடமும் வாய் திறப்பதில்லை. பொக்கிஷம் போல் இப்படத்தில் உள்ள கெட்டப்பிகளை பாதுகாத்து வருகின்றனர் அனேகன் யூனிட்.

நம்ம ஆட்கள் சும்மா இருப்பர்கள என்ன, சந்து போந்து வழிகளாம் சென்று அந்த கெட்டப்பிகளை பற்றிய விஷயங்களை அமுக்கி விட்டனர்.

முதல் கெட்டப்பில் சென்னை லோக்கல் ரவுடியாகவும் இரண்டாவது கெட்டப்பில் யூத்தான ஸ்டைலிஷ் லுக்கிலும் முன்றாவது கெட்டப்பில் சுருட்டி முடி வைத்த இது வரை கண்டிராத ஒரு புது விதமான லுக்கிலும் கடைசியாக தற்காப்பு நிபுணர் என்ற கெட்டப்பிலும் கலக்க உள்ளார்.

அனேகன் படத்தை தன் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக அமையும் என்று தெரிவித்து உள்ளார். இதில் ஹீரோ மட்டும் இல்லாமல் வில்லனாக நடிக்க உள்ள நவரச நாயகன் கார்த்திக்கும் சால்ட் & பேப்பர் லூக்கில் அஜித்தை போல் கலக்க உள்ளாராம்.