தீர்மானமிக்க நாட்களில் பயணிக்கும் இலங்கை : வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!

391

கொரோனா..

இலங்கையில் கடந்த நாட்களாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை தீர்மானமிக்க நாட்களில் பயணிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த கூடிய விரைவில் நோயாளிகளை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

அதற்கமைய சந்தேகத்திற்குரிய நோயாளிகளை விரைவில் சோதனையிடுவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பில் தங்கள் சங்கம் இதற்கு முன்னர் மேற்கொண்ட கணிப்பு தற்போது உண்மையாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இதுவரை 151 கொரோனா நோயாளர்கள் இனங்கண்டுள்ள நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.