கொரோனாவைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு நிதி வழங்க உலக வங்கி இணக்கம்!!

545

உலக வங்கி..

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனிதர்களிடையே பரவி, தொற்றி, உயிரிழப்புக்களை சந்தித்துக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கும் இலங்கைக்கும் 128.60 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை உலக வங்கி வழங்குகிறது.

இலங்கை கோவிட் -19 அவசரகால வெளிப்பாடு மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை திட்டத்தின் கீழ் இந்த நிதியை கடனாக வழங்க உலக வங்கியின் பணிப்பாளர் சபையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கோரவிட் -19 நோய் தொற்றை கண்டறிதல், கட்டுப்படுத்தல் மற்றும் பொதுச் சுகாதார சேவையை மேம்படுத்தல் ஆகிய தேவைகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்த உலக வங்கி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதுபோன்று இந்தியாவுக்கும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. நோயாளிகளை கண்டறிதல், தனி படுக்கை வசதிகளை உருவாக்குதல், கொரோனா குறித்த ஆய்வு மற்றும் மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு இந்த நிதி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.