பணத்தைக் கொடுத்து 13 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய 61 வயது நபர்!!

624

Abuse13 வயதான சிறுமிக்கு பணத்தை கொடுத்து ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 61 வயதான நபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் சிறுமிக்கு 50 ரூபா பணத்தை கொடுத்து இரண்டு மாதங்களாக அவ்வப்போது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தானும் கணவனும் வேலைக்கு சென்றுவிடுவோம். 13 வயதான மகளும் இளைய மகனும் பாடசாலைக்கு சென்று திரும்பிய பின்னர், மகன் விளையாடுவதற்காக வெளியில் சென்றுவிடுவார்.

இந்த நிலையில் அயல் வீட்டை சேர்ந்த சந்தேக நபர் தனது மகளை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக சிறுமியின் தாய் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பண்டாரகம பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து ஹொரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.