கல்கிஸ்ஸையில்..
கல்கிஸ்சையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சேரம் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடைய சடலமாக இது இருக்கலாம் சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் உறுதி செய்யப்படவில்லை.
கல்கிஸ்ஸ நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய சர்வதேச தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய சடலத்திற்கு அருகில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காக சடலம் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.