அடுத்த இரு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது!!

388

கொரோனா

அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்றியவர்களை அடையாளம் காண பரிசோதனைகளை அதிகரிக்குமாறு வழங்கப்பட்ட ஆலோசனையை கவனத்தில் கொள்ளாது சுகாதார அமைச்சு செயற்பட்டுள்ளதால்,

கொரோனா வைரஸ் நான்காம் கட்டத்திற்கு வந்து முழு சமூகத்திற்குள்ளும் பரவும் ஆபத்து இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.

நாட்டில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட போது, எதிர்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதால், பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய போதிலும் அதிகாரிகள் அது குறித்து அக்கறை காட்டவில்லை என்பதால்,

கொரோனா வைரஸ் பயங்கரமான வகையில் சமூகத்தை பாதிக்கும் ஆபத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றியவர்களை அடையாளம் காண தினமும் ஆயிரத்து 500 பரிசோதனைகளை நடத்த வேண்டும்.

எனினும் தற்போது தினமும் சுமார் 300 பரிசோதனைகளே நடத்தப்பட்டு வருவதாகவும் அளுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.