ஷேவாக், யுவராஜின் விலை 2 கோடி!!

442

Sewagஐபிஎல் T20 7வது சீசன் போட்டியில் வீரேந்திர ஷேவாக், யுவராஜ் சிங், முரளி விஜய் ஆகியோரின் அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டியின் 7வது சீசன் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.
இதற்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 12, 13ம் திகதி பெங்களூரில் நடக்க உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் தலா 5 வீரர்களையும், ரோயல் சேலஞ்சர்ஸ் 3 வீரர்களையும், சன் ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் தலா 2 வீரர்களையும் தக்க வைத்துக் கொண்டன.

இந்நிலையில் போட்டியில் ஏலம் விடுவதற்கான 233 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ 8 அணி நிர்வாகத்திடமும் தற்போது வழங்கியுள்ளது.

இதில் வீரர்களின் அதிகபட்ச அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஷேவாக், யுவராஜ் சிங், முரளி விஜய், தினேஷ் கார்த்திக், உத்தப்பா, நெஹ்ரா, அமித் மிஸ்ரா உள்ளிட்ட இந்திய வீரர்கள் 2 கோடி பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய தரப்பில் ஸ்மித், ஹாட்ஜ், ஸ்டார்க், பெய்லி, ஹட்டின், பிரட் லீ, பேட்டின்சன் ஆகியோரும் 2 கோடி பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து 46 வீரர்களும், அவுஸ்திரேலியாவிலிருந்து 46 வீரர்களும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மேலும் இலங்கை, மேற்கிந்திய தீவுகள், தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து, ஹாலந்து, வங்கதேசம், நியூசிலாந்து அணி வீரர்களும் பட்டியலில் உள்ளனர்.

2 கோடியை அடுத்து வீரர்களின் அடிப்படை விலை முறையே 1 கோடி 50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிவேக சதம் அடித்து சாதனை படைத்த நியூசிலாந்து சகலதுறை வீரர் அண்டர்சன்1 கோடி வீரர்கள் வரிசையில் உள்ளார்.